டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில், அரசின் தலைமை ஆலோசகர் யூனுஸ் அளித்த பேட்டியில், ”ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தொடரில், இந்திய பிரதமர் மோடியை சந்திக்க முயற்சிக்கிறேன்.
இந்த மாத இறுதியில் சார்க் தலைவர்களை ஒரு புகைப்படம் எடுக்க முயற்சிப்பேன், இது ஒரு பெரிய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. சார்க் அமைப்பு செயல்படவில்லை.
சார்க் என்ற பெயரை நாம் மறந்துவிட்டோம். சார்க் அமைப்பின் உணர்வை மீட்டெடுக்க முயற்சிக்கிறேன். சார்க் மாநாடு நீண்ட நாட்களாக நடைபெறவில்லை. ஒன்றிணைந்தால், பல பிரச்னைகள் தீரும்,” என்றார்.
ஐ.நா.,வின், 79-வது பொதுக்குழு கூட்டம், இம்மாதம், 24-ம் தேதி முதல், 30-ம் தேதி வரை நடக்கிறது. ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில், 26-ம் தேதி ஐ.நா., கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுவார் என, குறிப்பிடப்பட்டுள்ளது.