புதுடெல்லி: அரியானா சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆளும் கட்சிகளான பா.ஜ.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பா.ஜ.க.வின் 67 பெயர்கள் கொண்ட முதல் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. பகதூர்கர், காலனூர், ரேவாரி உள்ளிட்ட சில தொகுதிகளில் வேட்பாளர்கள் மீது அக்கட்சியின் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் சீட் கிடைக்காததால் முன்னாள் அமைச்சர் கரண் கம்போஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ லட்சுமண நாபா ஆகியோர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர். இதுபோன்ற காரணங்களால் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் பச்சன் சிங் ஆர்யா, சபிடோன் தொகுதியில் போட்டியிடத் தயாராகி வந்தார்.
சமீபத்தில் ஜேஜேபியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ராம் குமார் கவுதமுக்கு அத்தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் பச்சன் சிங் கட்சியில் இருந்து நேற்று விலகினார்.