உயர்கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல், வணிகவியல் மற்றும் அறிவியல் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவார்கள்.
இத்திட்டத்திற்கு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆராய்ச்சித் திறனைப் பயன்படுத்தி, விவசாயம், மருத்துவம், உயிரியல், பொறியியல், சமூக அறிவியல் போன்ற துறைகளில் உள்ள சமூகப் பிரச்னைகளுக்கு அறிவியல் பூர்வமான தீர்வுகள் காணப்படும்.
தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (TANSCST) மாணவர்களின் ஆராய்ச்சி திறன்களின் அடிப்படையில் சமூகத்திற்கு பயனுள்ள தீர்வுகளை உருவாக்க இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.