புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது:-
அரசுப் பள்ளிகளில் 2019-20-ல் படித்த 30 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். இந்நிலையை மாற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றினோம்.
புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால் இந்த திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இத்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும். திமுக ஆட்சியில் பொதுமக்கள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி, காவல்துறையினருக்கும் பாதுகாப்பில்லை.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்க அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நமது ஆட்சியில் முதலீடுகளை ஈர்ப்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகள் தொடர்பாக வெளிப்படைத் தன்மை இல்லை. அதனால்தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் வெள்ளை அறிக்கை கோருகின்றன.
உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. இவ்வாறு பழனிசாமி கூறினார்.