சென்னை: விஜய்யின் இறுதி ஊர்வலத்தில் அதிமுக மூத்த தலைவர் செஞ்சி ராமச்சந்திரன் கலந்து கொள்வார் என்ற தகவலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “செஞ்சி ராமச்சந்திரன் தவெகவில் இணையப்போவதாக வதந்தி பரவுகிறது. அ.தி.மு.க., கடல் போன்றது; வலுவான இயக்கம்.
அரசு மருத்துவமனைகளில் பல குறைபாடுகள் உள்ளதாக மக்கள் தெரிவித்தனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு குழுவை அமைக்க வேண்டும்.
பரந்தூர் விமான நிலைய பிரச்னையில், கிராம மக்களை அழைத்து முறையாக விவாதிக்க வேண்டும். மாணவர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில், ஆதி திராவிட நல விடுதிகள் குறித்து கருத்து தெரிவித்தேன்.
தமிழகம் முழுவதும் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளை ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அரசு விசாரிக்க வேண்டும். மக்களின் குறைகளை தீர்க்க வேண்டியது ஆளும் அரசின் கடமை,” என்றார்.