சென்னை: தமிழகத்தில் புதிதாக விண்ணப்பித்த சுமார் 1 லட்சம் பேருக்கு விரைவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 குடும்ப அட்டைகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஓராண்டில் புதிய குடும்ப அட்டை கோரி 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக 92,000 விண்ணப்பதாரர்களுக்கு குடும்ப அட்டை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 80 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை தொடர்ந்து வழங்கப்படும். இதற்கிடையில், விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில், சுமார் 1 லட்சம் பேர் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் சரிபார்ப்பு பணி முடிந்து மீதமுள்ளவர்களுக்கு அட்டைகள் வழங்கப்படும் என உணவு வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.