பிரஸ்ஸல்ஸ்: முன்னணி ஆண், பெண் வீரர்கள் பங்கேற்கும் டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேற்று தொடங்கியது.
14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின் இறுதிச் சுற்று தற்போது பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வருகிறது. 2 இந்திய வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 3000மீ ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் சாப்லி 9-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, நேற்று முன்தினம் நடந்த ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் களம் இறங்கினார்.
மொத்தம் 6 சுற்றுகளுக்குப் பிறகு நீரஜ் சோப்ரா 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 3-வது சுற்றில் அதிகபட்சமாக 87.86 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்தார்.
இதே போட்டியில் கிரனாடாவை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அவர் 87.87 மீட்டர் தூரம் எறிந்தார். இதே போட்டியில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் 85.97 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார்.
முதல் பரிசை வென்ற பீட்டர்ஸுக்கு டயமண்ட் லீக் கோப்பையும், 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டது. நீரஜ் சோப்ராவுக்கு 12 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக் இறுதிச் சுற்றில் இடது கையில் எலும்பு முறிவுடன் பங்கேற்றது தெரியவந்துள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டாலும் மன உறுதியுடன் போட்டியில் கலந்து கொண்டு 2-ம் இடம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
அதற்கு சிகிச்சை பெற்று வந்த நீரஜ் இடது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு போட்டியில் பங்கேற்றார். இதுகுறித்து நீரஜ் சோப்ரா கூறும்போது, “கடந்த திங்கட்கிழமை பயிற்சியின் போது விரலில் வலி ஏற்பட்டது. பயிற்சியில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட வலி என்று முதலில் நினைத்தேன்.
ஆனால் எக்ஸ்ரே எடுத்ததில் இடது விரலில் எலும்பு முறிவு இருப்பது தெரியவந்தது. அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஆண்டு முழுவதும் எனக்கு ஆதரவாக இருந்த அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி.
2024-ல் என்னை சிறந்த தடகள வீராங்கனையாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. 2025-ல் சந்திப்போம்,” என்றார்.