மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 500 குறியீட்டில் உள்ள சிறந்த வளர்ச்சியைக் கொண்ட 50 நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்ட பங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றில் வருங்காலங்களில் நல்ல ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம், கடந்த ஆண்டில் மட்டும் 75% வருமானத்தை அளித்துள்ளது, மேலும் மூன்று ஆண்டுகளில் 35% வருமானத்தை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டைத் தொடங்கலாம்.
இந்த புதிய திட்டத்தில் முதலீட்டை செப்டம்பர் 4 முதல் 18 வரை என்.எஃப்.ஓ காலத்தில் செய்யலாம். சந்தையில் நிலவும் அபாயங்களை கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.