சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
தமிழகத்தை நோக்கி வீசும் மேற்குக் காற்றில் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.