நடிகர் சித்தார்த், தெலுங்கில் ‘மகா சமுத்திரம்’ படத்தில் அதிதி ராவ் ஹைதாரிக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் ஒன்றாக திரைப்பட விழாக்களுக்கு சென்று அது தொடர்பான படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பு தம்பதியினர் தங்கள் நிச்சயதார்த்தத்தை உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், ஸ்ரீரங்கப்பூரில் உள்ள, 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோவிலில், இவர்களது திருமணம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இயக்குனர் மணிரத்னம், கமல்ஹாசன் மற்றும் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அதிதி மற்றும் சித்தார்த் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அவர்களுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.