புதுடெல்லி: அரசியலுக்கு அல்ல சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் கூறியதை கெஜ்ரிவால் கேட்கவே இல்லை என அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே 2011-ல் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் முகமாக இருந்தார். ஊழலுக்கு எதிரான தனது லோக்பால் இயக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்து கொண்டார்.
பின்னர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால். டெல்லி மதுக்கொள்கை ஊழல் வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது, “கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு அவரது நடவடிக்கைகளே காரணம்.
என்னுடன் பணியாற்றிய போது மதுவுக்கு எதிராக பேசிய கெஜ்ரிவால், தற்போது மதுக் கொள்கையை அமல்படுத்துவது வருத்தமளிக்கிறது” என்று அன்னா ஹசாரே கூறினார்.
இதனிடையே, மதுக்கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள கெஜ்ரிவால், 2 நாட்களில் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
நேற்று அன்னா ஹசாரே கூறுகையில், ”கெஜ்ரிவாலிடம் வேலையில்லாமல் இருந்தபோது, ’அரசியலில் சேராதே, சமுதாயத்திற்கு சேவை செய், நீ பெரிய மனிதனாவாய்’ என்று அவரிடம் கூறினேன். சமூக சேவை என்னை மகிழ்விக்கும் என்று சொன்னேன்.