மீனம்பாக்கம்: சிங்கப்பூர் புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
விமானத்தின் கோளாறுகளை சரிசெய்து, 9 மணி நேரம் தாமதமாக இன்று காலை 10.32 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டது. சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் இன்று அதிகாலை 1.40 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூர் புறப்பட உள்ளது.
விமானத்தில் பயணிக்க வேண்டிய 174 பயணிகளும் நேற்று இரவு 11 மணிக்கு முன்னதாக வந்து அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்தனர். முன்னதாக சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 11.40 மணிக்கு சென்னை வந்து அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூர் செல்லும்.
இந்நிலையில் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12.21 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, பணியில் இருந்த விமானி, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாகவும், அவற்றைச் சரிசெய்த பிறகு விமானத்தை மீண்டும் இயக்கலாம் என்றும் குறிப்பு எழுதி வைத்தது விமான நிறுவன அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்ய முடியாததால், காலை 5, 8, 10 மணிக்கு புறப்படும் என அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகின.
இந்நிலையில், சுமார் எட்டரை மணி நேரம் தாமதமாக சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று காலை 10.25 மணிக்கு பயணிகளுடன் புறப்பட்டது.
ஆனால், விமானம் ஓடுபாதையில் சிறிது நேரம் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் சுமார் 9 மணி நேரம் தாமதமாக காலை 10.32 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டது.
174 பயணிகளும் விமானத்தில் செல்வோமா என்ற அச்சத்தில் மிகுந்த பதட்டத்துடன் ஓய்வறையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.