இந்திய அளவையும் தாண்டி, உலகளவில் பிரசித்தி பெற்ற கோவல்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் கோவில், ஆண்டுக்கு பல லட்சம் பக்தர்கள் தரிசிக்க வரும் முக்கிய புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. ஆனால், தற்போது இந்த கோவிலின் லட்டு பிரசாதத்தில் ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக, இந்த லட்டுகள் கடவுளுக்கும் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், திருப்பதி தேவஸ்தானத்தில் அளிக்கப்படும் லட்டுகளில் பன்றி மற்றும் மாட்டின் கொழுப்பும், சோயா பீன்ஸ், சூரியகாந்தி மற்றும் மீன் எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஆந்திர அரசியலிலும் பெரும் பரவலாக பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இதற்கான காரணம் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர், இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தது அவர் ஆட்சி காலத்தில் தான் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது கருத்தை வெளியிட்டு, “திருப்பதி கோவிலில் அளிக்கப்படும் லட்டுக்களில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், “இதுபோன்ற செயல்களை தடுக்கும் வகையில், சனாதன தர்ம ரக்ஷனா வாரியம் என்ற குழுவை உருவாக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.
பவன் கல்யாணின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, நடிகர் பிரகாஷ்ராஜ், “இந்த விவகாரம் உங்களுடைய ஆட்சி காலத்தில் தான் நடந்திருக்கிறது. புதிய பிரச்சினைகளை இங்கு கொண்டு வராதீர்கள்” என தெரிவித்துள்ளார்.