சென்னை: இன்று (செப். 22) தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படும் வேளையில் வீட்டில் இருக்கக்கூடிய பெற்றோர்கள் தங்களுடைய மகளுக்கு பரிசு பொருள்களை வழங்கி நாளினை சிறப்பிக்கிறார்கள்.
இதை செய்தால் மட்டும் போதாது. ஏனெனில் இந்தியா போன்ற நாடுகளில் மகன்கள் முதன்மையான வாரிசுகளாகக் பார்க்கப்படும் நிலையில் மகள்களுக்கும் சம முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியது அவசியமாகும். இதை வலியுறுத்துவதும் இந்நாளின் முக்கிய நோக்கம்.
இந்தியாவில் தேசிய மகள்கள் தினம் செப்டம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தை என்பது ஒரு குடும்பத்திற்கு கிடைக்கும் பெரிய பொக்கிஷம். இருந்தாலும் இன்றைய சமூகத்தில் ஆண் குழந்தையை காட்டிலும் பெண் குழந்தைகளை சற்று தாழ்வாக பார்க்கிறார்கள்.
இது முழுமையாக மாற வேண்டியது அவசியம். அதே நேரம் மகள்கள் தினம் என்பது குடும்பத்தினர் மகள்களுக்காக கொண்டாடும் ஒரு குடும்ப விழாவாக மாறி வருகிறது