சென்னை: செம்பரம்பாக்கம் ஊராட்சியில் பா.ஜ., சார்பில் உறுப்பினர் பதிவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
மாநில ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் ஆனந்த பிரியா, உறுப்பினர் சேர்க்கை நிர்வாகி ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர் அஷ்வின்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு ஏற்கனவே கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கஷ்டப்பட்டு வளர்ந்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்களுக்கு மோடி உதவி செய்து வருகிறார். தமிழகத்தின் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர், சாலை வசதி செய்து கொடுத்துள்ளார். பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தார்.
இந்தியை யாரும் திணிக்கவில்லை. நான் உறுதியாக சொல்கிறேன். ஹிந்தி திணிக்கிறதா என்று கேளுங்கள். ஐபட்ஜெட்டில் வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட, ஒன்றிய, மண்டல நிர்வாகிகள் ராஜ்குமார், ஆர்யா சீனிவாசன், முல்லை ஞானம், கணேசன், வெங்கடேசன், மணிகண்டன், ரஞ்சனி, தினேஷ்குமார், மொரார்ஜி தேசாய், ராஜேஷ் சர்மா, உதயகுமார், சண்முகம், நடராஜன், பிரபாகரன், பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.