ஜெய்ப்பூர்: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 இறுதிப் போட்டி நேற்று (செப்டம்பர் 22) ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா மற்றும் நடிகை ஊர்வசி ரவுதெலா, நிகில் ஆனந்த், வியட்நாம் திரைப்பட நட்சத்திரம் குயங் க்வின் ஆகியோர் இந்த கண்கவர் நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றனர்.
51 போட்டியாளர்களுடன் நடைபெற்ற இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் 2024-ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி இந்தியா 2024-ம் ஆண்டிற்கான மகுடத்தை குஜராத்தை சேர்ந்த ரியா சிங்கா வென்றார்.
முதல் ரன்னர்-அப் இடத்தை ஃப்ரான்ஜல் பிரியாவும், 2-வது ரன்னர்-அப் இடத்தை சாவி வெர்ஜ், 3-வது ரன்னர்-அப் இடத்தை சுஷ்மிதா ராய், 4-வது இடத்தை ரூஃபுசானோ விசோவும் பெற்றனர்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்ற பிறகு, நவம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் ரியா சிங்கா.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றது பற்றி சிங்கா கூறினார், “மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை நான் வென்றுள்ளேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த தலைப்புக்கு என்னைத் தகுதிப்படுத்த நான் நிறைய உழைத்திருக்கிறேன்.
இதற்கு முன் இந்த பட்டத்தை வென்றவர்களிடம் இருந்து எனக்கு ஊக்கம் கிடைத்தது, என்றார். நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான ஊர்வசி ரவுத்தேலா, “இந்த முறை மிஸ் யுனிவர்ஸ் 2024 பட்டத்தை இந்தியா வெல்லும் என்று நான் நம்புகிறேன். இங்கு கலந்து கொண்ட அழகிகள் அனைவரும் திறமையானவர்கள். இந்த திறமை இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தரும்,” என்றார்.