நடிகை சிம்ரன் தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க நடிகர் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டதாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின.
கடைசியாக விஜய் 69 படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சிம்ரன், அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதுவரை எந்த பெரிய ஹீரோக்களுடனும் நடிக்க ஆசைப்பட்டதில்லை. வாய்ப்புகள் வரும்போது நடித்திருக்கிறேன். இப்போது வாழ்க்கையில் என் இலக்குகள் மாறிவிட்டன. ஒரு பெண்ணாக, என் எல்லைகள் எனக்குத் தெரியும்.
சமூக வலைதளங்களில் எனது பெயரை சிலருடன் இணைத்தபோது நான் அமைதியாக இருந்தேன், ஆனால் சுயமரியாதை முக்கியம். ‘ஸ்டாப்‘ என்பது சக்திவாய்ந்த வார்த்தை.
இப்போது அதைப் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். என்னைப் பற்றி வதந்தி பரப்பியவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார்.