சென்னை: தொழில்துறை சார்பில் தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 23) காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து, புதிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் கூட்டுறவுகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூ.4.66 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப் பரிசோதனை ஆய்வகம் மற்றும் ரூ.17.04 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 கிடங்கு வளாகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.
கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ரூ.36.25 கோடியில் கட்டப்பட்டுள்ள 58 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடங்களையும், ரூ.15.22 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
இதுதவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 110 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில், பொதுப்பணித்துறை மூலம் உதவி வன பாதுகாவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 5 பேருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், தமிழகத்தில் உள்ள சிறு நகரங்களில் தொழில்துறை சார்பில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு வரும் நோக்கில், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தாலுக்கா, பிள்ளையார்பட்டி கிராமத்தில், 30.50 கோடி ரூபாயிலும், சேலம் மாவட்டத்தில், 29.50 கோடி ரூபாயிலும், மினி டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது.
ஓமலூர் தாலுகா, ஆனைகவுண்டன் பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. வைத்தது அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன் நிகழ்ச்சியில், அர.சக்கரபாணி, சிவ.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மற்றும் துறைச் செயலர்கள் பங்கேற்றனர்.