டெல்லி: 2025-ம் ஆண்டு 97-வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 6 தமிழ் படங்கள் உட்பட 28 படங்களை பரிந்துரைக்க உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய திரைப்பட கூட்டமைப்பு அளித்துள்ள பேட்டியில், “2025-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு 6 தமிழ் படங்கள் போகிறது. மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான், ஜமா 12 ஆகிய படங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தி படங்கள், 4 மலையாள படங்கள், 3 மராத்தி மற்றும் 6 தெலுங்கு படங்களும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து 28 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன, இதில் 6 தமிழ் படங்கள் அடங்கும்.
லாப்பட்டா லேடீஸ், கல்கி 2898, ஆட்டம், ஆடு ஜீவிதம், ஆர்ட்டி 370, அனிமல், உனொலுக்கு, வீர் சாவர்க்கர், சாம் பகதூர் உள்ளிட்ட படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அயல்நாட்டுப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ‘லப்பட்டா லேடீஸ்’.
இந்நிலையில், ரஷ்ய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ‘கொட்டுக்காளி’ கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. சிவகார்த்திகேயன் தயாரித்து, சூரி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘கொட்டுக்காளி’.