நடிகரின் வாரிசு ஒரு பக்கம் இருந்தாலும், விஜய் டிவியில் ஹீரோவாக நடிக்கிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் வரிசையில் புதிய ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார் கேபிஒய் பாலா.
கவுண்டர் டயலாக்குகளால் பிரபலமான இவர் தற்போது மக்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார். ராகவா லாரன்ஸ் ஆரம்பித்த அறக்கட்டளை மூலம் நன்கொடை வழங்குகிறார்.
இந்நிலையில் அவர் மூன்று படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வைபவ் நடித்த “ரணம்” படத்தை ஷெரீப் இயக்கியிருந்தார். பாலா தனது அடுத்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்க உள்ளார். அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர மேலும் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் பாலா ஒரு சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்ததால் ரசிகர்கள் அவரை நகைச்சுவை நடிகர் என்று தவறாக எண்ணினர். ஆனால் தற்போது அவர் ஹீரோவாகிவிட்டதாக பலரும் பாராட்டியுள்ளனர்.
சிவகார்த்திகேயன் போன்றவர்கள் காமெடியனாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தளபதி அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். சமூக சேவை மற்றும் நடிப்பு என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்ய தயாராகிவிட்டார் பாலா.