ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ‘அயலான்’ படத்திற்குப் பிறகு ரவிக்குமாரின் அடுத்த படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
ரவிக்குமார் ‘அயலான்’ படப்பிடிப்பின் போது சூர்யாவை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். இதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால், சூர்யா அந்தக் கதையிலிருந்து ஒதுங்கிவிட்டார்.
தற்போது ரவிக்குமார் இயக்கும் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘மகாராஜா’ வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் கால்ஷீட் கிடைத்துள்ளது. இதனையடுத்து ரவிக்குமார் மற்றும் விஜய் சேதுபதி எப்படி இணைவார்கள் என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இது குறித்து இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். இது சூர்யாவிடம் சொன்ன கதையா, அல்லது புதிய கதையா என்பது விரைவில் தெரியவரும். ஆனால் பாண்டிராஜை முடித்துவிட்டு ரவிக்குமாரை ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறாராம் விஜய் சேதுபதி.