பிரசாந்த் வர்மா இயக்கிய ஹனுமான் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படம். தேஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
இதையடுத்து பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிக்க முன் வந்தனர். ரன்வீர் சிங் நடிக்கும் இந்தி படத்தை பிரசாந்த் வர்மா இயக்க இருந்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக விலகினார்.
இப்போது பாலையாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்கவுள்ளார். இதற்கிடையில் பிரசாந்த் வர்மா கார்த்தியை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். ‘சத்யம் சுந்தரம்’ (மெய்யழகன் – தெலுங்கு வெளியீடு) நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் வர்மா இதை உறுதிப்படுத்தினார்.
விழாவில் பேசிய கார்த்தி, பிரசாந்த் வர்மாவின் கதை அற்புதம் என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம் பிரசாந்த் வர்மா – கார்த்தி புதிய படத்தில் இணையவிருப்பது உறுதியாகியுள்ளது.
ஆனால், படத்தின் தயாரிப்பாளர், எப்போது படப்பிடிப்பு என எதுவும் முடிவாகவில்லை. பாலய்யா மகன் படத்தை முடித்துவிட்டு கார்த்தி நடிக்கும் படத்தை பிரசாந்த் வர்மா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.