விழுப்புரம்: தமிழ்நாடு வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.ரோட்டில் வரும் 23-ம் தேதி முதல் மாநாடு நடத்த அனுமதி கோரி, நிர்வாகிகள் போலீசில் மனு அளித்தனர்.
இதையடுத்து 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய், மாநாடு தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மீண்டும் விழுப்புரம் ஏடிஎஸ்பி திருமாலிடம் மனு அளித்தார். 21-ம் தேதி மாநாட்டுக்கு அனுமதி கோரி மீண்டும் விழுப்புரம் ஏடிஎஸ்பி திருமாலிடம் மனு அளித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தவேக மாநாட்டுக்கு 17 கட்டாய நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல், விளம்பர பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கக்கூடாது, முதியோர், கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான இடவசதி, ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் மாநாட்டு திடலில் நிறுத்தப்பட வேண்டும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும்.
மாநாட்டிற்கு வருபவர்களுக்கு போதிய அளவில் வழங்க வேண்டும். வி.ஐ.பி.,க்கள் பிரச்னை ஏற்படாமல் இருக்க போதிய தடுப்புகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.