புதுடெல்லி: துர்கா பூஜை அக்டோபர் 8-ம் தேதி தொடங்குகிறது. தீபாவளி அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் நவ., 7 மற்றும் 8-ம் தேதிகளில் சாத் பூஜை நடக்கிறது.
பண்டிகை காலம் நெருங்கி வருவதால், வெளியூர்களில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல, சிறப்பு ரயில்களை இயக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறும்போது, “பண்டிகைக் கால நெரிசலைக் குறைக்கும் வகையில் கிட்டத்தட்ட 6,000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதற்காக 108 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 12 ஆயிரத்து 500 பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 5,975 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 1 கோடி பயணிகள் பயனடைவார்கள்,” என்றார்.