அபுதாபி: சிறந்த நடிகருக்கான விருது… இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவில் இந்திய சினிமாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் நானிக்கும், சிறந்த பெண் விருதை சமந்தாவிற்கும் கொடுக்கப்பட்டது.
அபுதாபியில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்னம் பெற்றுக் கொண்டார்.
சிறந்த நடிகருக்கான விருதை தசரா படத்திற்காக தெலுங்கு நடிகர் நானி பெற்றார். மேலும், சிரஞ்சீவிக்கு இந்திய சினிமாவில் சிறந்த சாதனையாளர் விருதும், சமந்தாவிற்கு ‘இந்திய சினிமாவின் இந்த ஆண்டிற்கான சிறந்த பெண்’ என்ற விருதும் வழங்கப்பட்டது.
3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், திரைபிரபலங்கள் பாலகிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மான், ராணா டக்குபதி, வெங்கடேஷ் டக்குபதி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாகித் கபூர், அனன்யா பாண்டே, கீர்த்தி சனோன், கரண் ஜோகர், ஐஸ்வர்யா ராய், ஜாவித் அக்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.