சென்னை: காஞ்சிபுரத்தில் நடந்த, தி.மு.க., பவள விழாவில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-
மத்திய அரசாக இருந்தாலும் சரி, மற்ற மாநில முதல்வராக இருந்தாலும் சரி, தமிழகம் வரும்போது, பொற்காலம் நடக்கிறது என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். தமிழக மக்களின் நலனே முக்கியம் என முதல்வர் ஸ்டாலின் கருதி செயல்பட்டு வருகிறார்.
மத்திய பாசிச ஆட்சிக்கு முதல்வர் சிம்ம சொப்பனம். கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு கடந்து தற்போது பவள விழா முதல்வர் மு.க.ஸ்டாலின். தி.மு.க.வின் நூற்றாண்டு விழாவைக் காணும் போதும் அவர் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற பொருளாதாரத்தை நோக்கி செல்கிறது என்பது இந்த நூற்றாண்டின் சிறந்த விஷயம். இவ்வாறு செல்வபெருந்தகை பேசினார்.