பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் தனது கனவு திரைப்படத்தை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது வரலாற்று சம்பந்தமான திரைப்படமாக இருக்கும் எனக் கூறியுள்ளார். திருநெல்வேலியில் பிறந்து தமிழ் திரையுலகில் மெகா ஹிட் இயக்குனராக மாறிய மாரி, இளம் வயதிலே அனுபவித்த பல வேதனைகளை திரைப்படமாக எடுத்துவருவதாக தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ், பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். “கற்றது தமிழ்” என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்தும் உள்ளார். “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. “கர்ணன்” என்ற திரைப்படம், பரியேறும் பெருமாளை விட 5 மடங்கு வெற்றி பெற்றது, இதனால் மாரி மெகா ஹிட் வெற்றியை பெற்றார்.
அதன்பின், உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து புதிய திட்டங்களில் ஈடுபட்டார். “வாழை” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. நடிகர் ரஜினிகாந்த், மாரி செல்வராஜை சந்தித்து வாழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் “பைசன்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அவர், கனவு திரைப்படம் குறித்து அறிவிப்பு வழங்கியுள்ளார். இது மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. இந்த படத்துக்காக குறைந்தபட்சம் ஒன்றரை வருடங்கள் தேவைப்படும் என கூறினார்.
அந்த திரைப்படத்தில் மீண்டும் நடிகர் தனுசுடன் இணைவதற்கான திட்டம் உள்ளது. ஆனால், கதைக்களம் குறித்து எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை. மிகப் பெரிய பட்ஜெட் வரலாற்று திரைப்படம் என்பதே உறுதி. சில ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.