காரைக்குடி: காரைக்குடி அருகே பிரேக் பழுதானதால், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நின்றது. சென்னை – காரைக்குடி இடையே பல்லவன் எக்ஸ்பிரஸ் 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் இன்று (செப்டம்பர் 30) காலை 5.35 மணிக்கு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. பள்ளத்தூர் அருகே செட்டிநாடு பகுதியில் அதிகாலை 5.45 மணியளவில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் கோச்சின் பிரேக் கட்டியதில் இருந்து புகை வந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் காரைக்குடியில் இருந்து வந்த ரயில்வே பொறியாளர்கள் பழுதை சரி செய்தனர். 55 நிமிடங்கள் தாமதமாக காலை 6.40 மணிக்கு ரயில் புறப்பட்டது.
இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.