வாஷிங்டன்: சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை ஏற்றிச் சென்ற ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை மாலை சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது.
ஜூன் 5 அன்று, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டனர். அடுத்த நாள் ஜூன் 6 அன்று அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.
அன்றிலிருந்து அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கிறார்கள். அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம். 100 நாட்களுக்கும் மேலாக விண்வெளி மையத்தில் இருந்த இவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை மீட்பதற்காக ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் புளோரிடாவின் கேப் கானவெரலில் இருந்து மதியம் 1 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் புறப்பட்டனர்.
க்ரூ-9 விண்கலம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. விண்கலத்தில் மேலும் 2 வீரர்களுக்கு இடம் உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.