சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்.எல்-1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதை சார்ந்த பார்கள், எப்.எல்.-2 உரிமம் பெற்ற கிளப்களுக்கு சொந்தமான பார்கள், FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் FL-3 (A), FL-3 (AA) உரிமத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பார்கள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும்.
மது விற்பனை இல்லை. தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.