பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழனிதண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் ராஜ கோபுரம் ஒன்றரை ஆண்டுகளாக சேதம் அடைந்து வருகிறது.
அறுபடை வீடுகளில் 3-வது வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 2023 ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், ராஜகோபுரத்தின் உச்சியின் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது. இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
கோபுரத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ”ராஜ கோபுரத்தின் உச்சியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது உண்மைதான்.
அப்பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலகர்ஷனம், பாலாலய பூஜை மற்றும் அதன் பின் நடத்த திட்டமிட்டுள்ளோம். கோபுரத்தின் பழுது, சிறிய அளவிலான கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.