திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கலப்படம் தொடர்பான விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி துவரகா திருமலை ராவ் தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோத்ஸவ பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய நேற்று திருப்பதி திருமலை வந்த ஆந்திர டிஜிபி துவாரகா திருமலை ராவ், போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் டிஜிபி துவாரகா திருமலை ராவ் கூறியதாவது:-
லட்டு பிரசாதத்தில் நெய் கலப்படம் தொடர்பாக தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நிலுவையில் உள்ள நிலையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.