சீனாவில், ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடியும், ஸ்பெயினின் பாப்லோ புஸ்டா, பெட்ரோ மார்டினெஸ் ஜோடியும் மோதின.
முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய இந்திய-குரோஷிய ஜோடி இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம் மூன்று நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் போபண்ணா, டோடிக் ஜோடி 6-4, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களின் பங்களிப்பு ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியாவின் சுமித் நாகல் மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் முதல் சுற்றுடன் திரும்பினர்.