பாரீஸ்: ‘இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்திவிட்டது’ மற்ற நாடுகளும் ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார். காசா, லெபனான் மற்றும் ஹூதி படைகளை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது.
இதனால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்து பேசும் போது, காஸாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு தீர்வு காண வேண்டும் என மக்ரோன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் தொடராமல் தடுப்பதே எங்களின் நோக்கம். தற்போது லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் மற்றொரு காஸாவாக மாறக்கூடாது.
பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் மட்டும் இஸ்ரேலுக்கு 30 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரான்ஸ் வழங்கியுள்ளதாகவும், இது பெரும் கவனத்தை ஈர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையிலிருந்து அமைதியைக் காண முயற்சிகள் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.