தமிழகத்தில் நாளை (07.10.2024) முழுநேர மின்வெட்டு ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறது. மின்சார வாரியம் பல்வேறு துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை நடைமுறைப்படி செய்கிறது.
அந்த வகையில், அக்.,7ல், தமிழகத்தின் சில பகுதிகளில், முழு நேர மின்வெட்டு ஏற்படும் என, மின் வாரியம் அறிவித்துள்ளது.கோவை, புதூர் துணை மின்நிலையத்தில், சூலூர், இண்டஸ்ட்ரியல் பேட்டை, நீலம்பூர், பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. குளத்தூர் லட்சுமி நகர் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துண்டிக்கப்படும்.
சென்னையில் உள்ள தேவம்பட்டு துணை மின்நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தேவம்பட்டு, அகரம், பள்ளிபாளையம், செக்கானியம், ராக்கம்பாளையம், பூங்குளம், கல்லூர் ஆகிய கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். பல்லடம், வடுகபட்டி துணை மின் நிலையம், மார்கட்டி, என்.சி.ஜி.வலசு, வடுகபட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும்.
பெரம்பலூர், ஈச்சங்காடு துணை மின்நிலையம், ஆதனக்குறிச்சி, மாத்தூர், தூலார் சுரங்கப்பாதை, சிலுப்பனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை. சேலத்தில் குடமலை, பேளூர் துணை மின் நிலையங்கள், ஆதனூர்பட்டி, வெள்ளாளப்பட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம், கூலமாடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, கொண்டயம்பள்ளி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
உடுமலைப்பேட்டையில் உள்ள தேவனூர்புதூர் துணை மின்நிலையத்தில் தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், கிராங்கபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
வேலூர், சோளிங்கர் துணை மின்நிலையத்தில் பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகால், எறும்பி, கொண்டபாளையம், கரிகால், சோலிங்கர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். மின்வெட்டு காரணமாக மின்சாதனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.