பெரம்பலூர்: தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், கடந்த கல்வியாண்டில், 10-ம் வகுப்பு தேர்வில், சிறந்த மதிப்பெண் பெற்ற, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, நேற்று, பெரம்பலூரில், பரிசளிப்பு விழா மற்றும் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
100 சதவீத தேர்ச்சிக்கு காரணமான அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வர் கவனத்தில் எடுத்து விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களிடையே தலைமைத்துவத்தை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய 5 மன்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பள்ளிகளில் முன்மாதிரி சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றங்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மாணவர்களுக்கு தலைமைப் பயிற்சி அளிக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் எமிஸ் செயலியில் தகவல் பதிவேற்றம் செய்ய 149 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 1,114 பள்ளிகளின் தகவல்களை பதிவு செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் எமிஸ் செயலியில் தகவல்களை பதிவு செய்ய மேலும் 1,800 பேர் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அதன்பிறகு, எமிஸ் செயலியில் தகவல்களைப் பதிவேற்ற ஆசிரியர்களின் பணிச்சுமை கணிசமாகக் குறைக்கப்படும்.
கல்வித்துறை அதிகாரிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பின் நடுநிலையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.