2025-ம் ஆண்டு தொடக்கத்தில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பில் ஷாருக்கான் இணையவுள்ளார். அவரது மகளும் இதில் நடிக்கவுள்ளார். இதை முடித்துவிட்டு ‘பதான் 2’ படத்தை தொடங்க ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார்.
இதனை சித்தார்த் ஆனந்த் இயக்க, யாஷ் ராஜ் தயாரிக்கிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ‘ஸ்ட்ரீ 2’ இயக்குனர் அமீர் கௌசிக்கின் அடுத்த படத்தில் நடிக்க ஷாருக்கான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமீர் கௌசிக் மற்றும் தினேஷ் விஜயன் இருவரையும் ஷாருக்கான் சந்தித்துள்ளார். ‘ஸ்ட்ரீ 2’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் தினேஷ் விஜயன். இந்த கூட்டணியில் ஷாருக்கானுக்கு ஏற்ற சாகச கதை இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் நடிக்க ஷாருக்கான் ஆர்வம் காட்டி வருகிறார். மூன்று சந்திப்புகளுக்குப் பிறகு கூட்டணி உறுதியாக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.