சென்னை: திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
கேரளா மற்றும் தென் தமிழகத்தில் குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் வரும் 13-ம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும்.
திருநெல்வேலி, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கண்ட பகுதிகளுடன், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 10-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
11-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
12-ம் தேதி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 13-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புசூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெயூரில் 10 செ.மீ., நீலகிரி மாவட்டம் பார்வூட், கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம், நீலகிரி மாவட்டம் கேத்தி, மதுரை மாவட்டம் தனியாமங்கலம், நல்லதங்கல் நீர்த்தேக்கத்தில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா, விண்ட்வொர்த். எஸ்டேட், அழகரை எஸ்டேட், கிண்ணக்கொரை, கோவை, புதுக்கோட்டை மாவட்டம் கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று முதல் 11ம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. சூறாவளி காற்று வீசக்கூடும்.
இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.