டெல்லி: கேரளா மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 14-ம் தேதி வரை 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் வரும் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் விண்ட்வொர்த் எஸ்டேட்டில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது.
இதையடுத்து, ரெட் ஹில்லில் 6 செ.மீ., வேப்பூர் 5 செ.மீ., ஏற்காடு, சோலையார், சூலூர், தேனாம்பேட்டை, கீழ்கோத்தகிரியில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.