பெங்களூரு: பன்னரகட்ட தேசிய உயிரியல் பூங்காவில் சிறுத்தை ஒன்று சஃபாரி பேருந்து மீது குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை சில சுற்றுலாப் பயணிகள் சஃபாரி சவாரி செய்தனர். அப்போது திடீரென சிறுத்தை ஒன்று பஸ் மீது பாய்ந்து ஜன்னல் கண்ணாடியை உதைத்தது.
பின்னர் பஸ்சின் மேற்கூரை மீது ஏறியது. இதனால் சுற்றுலா பயணிகள் பதற்றமடைந்தனர். பின்னர், சம்பவத்தை செல்போனில் படம் பிடித்தனர். டிரைவர் பஸ்சை மெதுவாக ஓட்டியதையடுத்து சிறுத்தை கீழே குதித்து வழக்கமான இடத்திற்கு சென்றது.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சஃபாரி பேருந்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் இரும்பு கம்பிகளால் பின்னப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.