ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளை மெலிக்கும் நோயாகும், இது உலகளவில் பெரும்பாலான மக்களை பாதிக்கிறது. இந்த நிலையில், எலும்புகள் பலவீனமாகவும், உடையக்கூடியதாகவும் மாறும். எலும்பு அடர்த்தி குறைதல், எலும்பு திசுக்களின் சிதைவு, உடல் பருமன், மூட்டு வலி மற்றும் காலப்போக்கில் உயரம் குறைதல் போன்ற அறிகுறிகள் ஆபத்தை அதிகரிக்கின்றன.
கீல்வாத வலியைக் குறைக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் சில சிறந்த பழங்களை உட்கொள்ளலாம். மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ராஸ்பெர்ரி, தர்பூசணி, திராட்சை மற்றும் மாதுளை போன்ற பழங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த பழங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மூட்டு வலியை குறைக்கவும் உதவுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடிக்கடி கட்டுப்படுத்தலாம்.