மும்பை: ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், ரெப்போ விகிதம் 6.5% ஆக இருக்கும் என்றார்.
பிப்ரவரி 2023 முதல் தொடர்ந்து 10-வது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ஆகும்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடி ரெப்போ விகிதத்தை முடிவு செய்யும். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று (அக்டோபர் 9) அறிவித்தார்.
பொதுவாக ரெப்போ விகிதம் உயரும் போது, வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும். ஆனால் தொடர்ந்து 10-வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றப்படாததால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையாது.
நீண்ட நாட்களாக வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறையவில்லை என்றும், இது சாமானியர்களுக்கு சுமை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். “நடப்பு நிதியாண்டில் நுகர்வோர் விலை பணவீக்கம் சராசரியாக 4.5% ஆக இருக்கும்.
இது மிதமான தொகையாக இருந்தாலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் முயற்சிகள் கவனமாகவும் விவேகமாகவும் செய்யப்பட வேண்டும். காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் சிக்கல்களால் ஏற்படும் பருவகால சிக்கல்கள் பணவீக்கக் கட்டுப்பாட்டை தொடர்ந்து சவால் செய்கின்றன.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.