சித்தூர்: சித்தூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் தக்காளி மானிய விலையில் கிலோ ரூ.46க்கு விற்பனையை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் துவக்கி வைத்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தக்காளி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தக்காளி சாகுபடி குறைந்துள்ளது. இதனால் தக்காளி கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு உழவர் சந்தைகளில் தக்காளியை மானிய விலையில் விற்பனை செய்ய மாநில உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நேற்று சித்தூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் ரூ.49க்கு தக்காளி விற்பனையை சித்தூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சங்கர் தொடங்கி வைத்தார்.
இதனை பொதுமக்கள் சிலர் வரவேற்று தற்போது ஒரு கிலோ தக்காளி வெளிமாநில சந்தையில் ரூ.70 முதல் ரூ.90 வரை விற்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் இதனை பயன்படுத்தி பயனடைய வேண்டும்.
மேலும், துவரம் பருப்பு உழவர் சந்தையில் கிலோ ரூ.150க்கும், வெளிமார்க்கெட்டில் கிலோ ரூ.170 முதல் ரூ.190க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்க்கரை ரூ.42க்கும், நிலக்கடலை ரூ.115க்கும் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரி சங்கர் கூறியதாவது: அரசு மானிய விலையில் விற்கப்படும் காய்கறிகள், பருப்பு விலை குறைந்துள்ளதால், சீத்தூர் மக்கள் பயன்பெற வேண்டும், விரைவில் வெங்காயம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.