திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி:-
காலியாக உள்ள 6 பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக, துணைவேந்தர் தேர்வுக் குழுவில், பல்கலைக் கழக மானியக் குழு பிரதிநிதியை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
துணைவேந்தர்களை நியமிக்காவிட்டால் 11 பல்கலைக்கழகங்கள் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தக்காளி, வெங்காயம் விலை அதிகரித்து வருவதால், அவற்றை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. இதனால் கிராமப்புற மக்கள் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.
எடப்பாடி அருகே புனிதா என்ற மாணவி தற்கொலைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவது கண்டிக்கத்தக்கது.
வீடியோ எடுத்த வி.சி.க. அரசை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாட தனி மைதானத்தை அரசு ஏற்பாடு செய்யலாம். இங்கு தீட்சிதர்கள் மட்டுமே விளையாட முடியும் என்று விளம்பரப் பலகை வைக்கலாம்.
அதனால் பல கோவில்களில் இந்த ஆட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது. கோயில் கிரிக்கெட் மைதானமாக மாறும் பேரழிவும் இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.