மதுரை: உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் தீபக் தாக்கல் செய்த மனு:-
மதுரை சட்டக்கல்லூரியில் கடந்த 1997-ம் ஆண்டு தமிழ் மூலம் சட்டம் படித்துள்ளேன்.
எனவே, தமிழ் வழியில் படித்ததற்கு பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், “1978-ம் ஆண்டு கல்வித்துறை ஆணைப்படி, மதுரை அரசு சட்டக்கல்லூரியில் தமிழ் வழியில் பாடம் உள்ளது. எனவே மதுரை சட்டக்கல்லூரி முதல்வர் மனுதாரருக்கு பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்க வேண்டும்,” என உத்தரவிட்டார்.