சென்னை: மும்பையில் இருந்து புறப்படும் இண்டிகோ விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாகவும், அது குறித்த எந்த தகவலையும் இண்டிகோ விமான நிறுவனம் முறையாக தெரிவிக்கவில்லை என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் நள்ளிரவு 12.24 மணிக்கு பதிவிட்டுள்ள பதிவில், “நான் எப்போதும் சாதாரண குறை சொல்பவர் அல்ல. ஆனால், இன்டிகோ நிறுவனம் இன்று அதிக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4 மணி நேரமாக எந்த தகவலும் இன்றி விமான நிலையத்திலேயே தவிக்கிறோம். உங்கள் பயணிகளுக்கு உதவுவீர்களா?” என பதிவிட்டுள்ளார்.
அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இண்டிகோ, “விமானம் தாமதத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். காலக்கெடுவைக் கடந்து காத்திருப்பது எவ்வளவு கடினம் என்பதை நாங்கள் முழுமையாக புரிந்துகொள்கிறோம்.
வானிலை காரணமாக மும்பையில் விமானங்கள் தாமதமாகி வருகின்றன. இந்த காரணிகள் அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
எங்கள் விமான நிலையக் குழு பயணிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.