மும்பை: நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக நவராத்திரி விழா நடந்து வரும் நிலையில் நேற்று மும்பையில் அஷ்டமி, நவமி பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் நடிகை கஜோல், நடிகர் அஜய் தேவ்கன், நடிகை ஆலியா பட் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், துர்கா பூஜையின் போது, துர்கா தேவி சிலை அருகே நின்று கொண்டிருந்த நடிகை கஜோல், திடீரென உணர்ச்சிவசப்பட்டு கூச்சலிட்டார்.
அந்த வீடியோவில், துர்கா பந்தலுக்கு செருப்பு அணிந்து வந்த ஒருவரை கஜோல் திட்டுகிறார். மேலும் ‘ஹலோ… ஹலோ… காலணிகளை கழற்றுங்கள்… கொஞ்சம் ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள்; பூஜைகள் நடக்கும் இடம் இது என்று ஆவேசமாக கூறுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.