பிரபல மலையாள நடிகர் சித்திக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக திருவனந்தபுரத்தை சேர்ந்த நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அவருக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சித்திக் விசாரணைக்கு ஆஜரானார்.
சனிக்கிழமை மீண்டும் அவர் விசாரணைக்கு ஆஜராகியபோது, சிறப்புப் புலனாய்வுக் குழு போலீஸார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர் அதிகம் ஒத்துழைக்காதவர் என்றும், பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவரது வழக்கில் எந்த ஆவணத்தையும் அவர் தாக்கல் செய்யவில்லை. ஒத்துழைக்காததால் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.