திருநெல்வேலி: கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 15-ம் தேதி மாலை முதல் 16-ம் தேதி நள்ளிரவு வரை கடல் சீற்றம் மிக அதிகமாக இருக்கும்.
எனவே கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும். இவ்விரு நாட்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு கலெக்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.