சென்னை: கனமழை காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் X இன் சமூக வலைதள பக்கத்தில், “கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கனமழை மற்றும் தீவிர காற்று நிலைகளில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே கனமழை முடியும் வரை அனைத்து பள்ளி நிர்வாகங்களும் ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது குறித்து தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய அமைச்சர், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக செய்திகள் வந்துள்ளன.
பெற்றோர்களும் ஆன்லைன் வகுப்புகளை விரும்புவதாக பள்ளிகள் தெரிவிக்கின்றன. ஆனால் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்குமாறு நாங்கள் உங்களை கடுமையாக வலியுறுத்துகிறோம்.
அதேபோல், பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து மாவட்ட நிர்வாகம் முந்தைய நாளே தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்.